Mail This Page

விடைச் செய்திகளும் நானும் ! (Messages And ME)டாக்டர் தன்னை மறைத்துக்கொண்ட நாளிலிருந்து தன் அன்பார்ந்த சீடர்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புகொண்டுதானிருக்கிறார். அவர்கள் ஏதேனும் குறித்து மனத்தளவில் நினைத்தாலும்,கவலை கொண்டாலும்,தன்னிச்சையாகப் பேசினாலும்கூட,உடன் பதில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை அனுபவ வாயிலாக சீடர்கள் உணர்ந்துள்ளனர்.கனவு மூலமாயும்,த்யானதிலிருக்கையிலும்,பிறர் வாயிலாகவும்,காதில் ஓதியும்,புத்தக வாயிலாகவும்,அக, புற செய்திகள் மூலமாகவும் எனப் பல்வகை வழிகளில் அவரது அன்பர்களுக்கு வழிகாட்டிக்கொண்டு வருகின்றார் டாக்டர்!

அடியேனைப் பொறுத்தவரை,நான் மனத்தளவில் எதனைப்பற்றி நினைத்தாலும் உடன் எனக்குப் பெரும்பாலும் செய்திகள் மூலமாக பதில் கிட்டிவிடும். அச்செய்திகள்,ஏதேனும் ஒரு சுவற்றிலோ,எவருடையவராவது சட்டை,பனியனிலோ,சுவரொட்டியிலோ,விளம்பரத்தட்டியிலோ(எவ்வளவு உயரத்திலிருந்தாலும் கூட),ஒரு ஆட்டோ-லாரி-காரிலோ எனப் பல்வழிகளிலும் நினைத்த அக்கணமே பதில் கிடைக்கும்! ஆனால் ஒன்று,பதில் எதிர்பார்த்து,நாமாக விடைகிட்டியதா என எதிலாவது தேடிக்கொண்டிருக்கக்கூடாது.அம்முயற்சி வியர்த்ததில் முடியும். அவர் நம் எண்ணத்திற்கேற்ப ஏதேனும் பதில் தந்திருந்தால், நம் முயற்சியின்றி, தக்க பதிலை அவர் எதிலேனும் நம்மைக் காணவைப்பார்! இது என் அனுபவம். இவ்வாறு மிகப்பல தருணங்களில்,என் எண்ணத்திற்கேற்ற தக்க பதில்களை,வழிகாட்டல்களை, மேற்கூறியவாறு,ஏதேனும் ஒரு சுவற்றிலோ,எவருடையவராவது மேலங்கியிலோ,சுவரொட்டியிலோ,அடுக்குமாடிக் கட்டிடத்தின் உச்சியிலோ,வாகனங்களிலோ என்னைக் காணவைத்திருக்கிறார்.வியக்க வைத்திருக்கிறார்(வியக்கும் கணங்கள் ஏராளம்)!.ஆம், ஒருமுறை,மவுண்ட் ரோடில் சென்று கொண்டிருக்கையில் ,எதனைப் பற்றியோ நான் நினைத்துக்கொண்டு வாகனம் செலுத்திக்கொண்டிருக்கையில்,ஒரு பலமாடிக் கட்டிடத்தின் உச்சியை நான் நோக்க, எனக்கு அங்கிருந்தது அதற்கேற்ற விடை! நான் ஏன் ,ஒரு மிகவும் போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில் மேல்நோக்கிப் பார்க்கத்துணிந்தேன் என்று பின்னர் வியந்தேன்.நானா பார்த்தேன்,பார்க்கவைக்கப்பட்டேன் என்று புரிந்து கொண்டேன்..எப்படி நான் சரியான வழிகாட்டுதல்களை,எண்ணத்திற்கேற்ற விடைகளை எவற்றில் அவை காணப்படுகிறதோ அவற்றை மட்டுமே நான் காண்கிறேன் என்று வியப்பதுண்டு.பின்னர் புரிந்தது,எதை எதில் காணவேண்டுமோ அதை அதில் காணவைப்பது அவர் என்று!

மேலும் புரிந்தது மற்றொன்று! நான் சிலகாலம் நினைத்து வந்தேன்,டாக்டர் என் எண்ணங்களுக்கேற்றவாறு,உடன் பதிலளிக்கிறாரென்று.ஹரியுடன் கூட இதுபற்றி பேசினேன்,அவரும் கேட்டுக்கொண்டார்.ஆனால் அனுபவம் ஏற்பட,ஏற்பட, பின்னர் எனக்குப்புரியலாயிற்று, நான் ஏதேனும் குறித்து நினைத்தாலோ,அன்றி விசனப்பட்டாலோ,அதற்கான மறுபதில்,நான் நினைக்குமுன்பே அங்கிருக்கிறதென்று! ஆம்,அதுதான் உண்மை! இந்த எண்ணத்தையும் ஹரியிடம் பிறிதொரு சமயம் கூற,அவரும் சிரித்துக்கொண்டே,'சரியாகக் கூறினீர்கள்,முன்னேற்றம்தான்' என்றார்.

இங்கு நான் ஒரு சில அனுபவங்களைக் கூறவிழைகிறேன்.(எண்ணிறந்த அவற்றில் ஒரு சில!).

ஒரு சமயம்,நான் ஒருசில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மனத்துடன் அலுவலகம் நோக்கி ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருக்கையில்,என்னைக் கடந்து ஒரு ஆட்டோ செல்ல ,அதன் பின்புறத்தில்,'என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்' என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு என் மனதில் ஒரு தைரிய உணர்வு ஏற்பட்டது,மனம் அமைதியுற்றது.. ஆனால், சிறிது தொலைவு சென்றபிறகு, அந்த ஆட்டோ வலது புறம் திரும்ப,என் மனம் நினைக்கலாயிற்று, "ஏன் டாக்டர்,இவ்வளவு தானா?"என. அக்கணமே அந்த ஆட்டோ,நான் வியப்புற திரும்பவும் இடதுபுறம் ஒடித்து, என்னைத் தாண்டி என்னை வழி நடத்திச் செல்லலாயிற்று!

மற்றொரு சமயம்,நான் வண்டியில் சென்றுகொண்டிருக்கையில் என்னைக்கடந்து ஒரு மொபட் வாகனம் செல்ல,அதன் பின்புற இருக்கையை எதேச்சையாக நோக்க (இல்லை,நான் எதைக் காணவேண்டுமோ அதைமட்டும் காணவைப்பார்) அதில் டாக்டர் போல் அச்சாக ஒருவர்."'('அவராக) டாக்டராக இருக்குமோ, அவராக இருக்குமோ" என்று மனம் மீண்டும்,மீண்டும் வினா எழுப்ப,அந்த வண்டி வலதுபுறம் திரும்ப,என் எதிரில் ஒரு வேன் வர,அதன் முகப்பில்,'அவர்'( AVAR ) என ஆங்கிலத்தில் எழுதப்படிருக்கக் கண்டு நான் என் கேள்விக்கான நேரடியான விடைகண்டு ஆச்சர்யப்பட்டேன்.

பிறிதொரு சமயம்,காலைநேரம் அவசரமாக அலுவலகம் சென்றுகொண்டிருக்கையில்,என்னை மெதுவாக ஒரு அம்பாஸிடர் கார் கடக்கவும்,அதனை நான்நோக்க முன் இருக்கையில் டாக்டர்!. சந்தேகத்தால் சந்தர்ப்பம் இழந்தேன் என உணர்த்திற்று அதன் பின் நான் ஒரு சினிமா சுவரொட்டியில் கண்ட செய்தி, 'அறியாப்பையன்'.

டாக்டரின் சிஷ்யை மைதிலிசிவராமன் வீட்டில் ஒரு சத்சங்கம் நடந்தது.மேடத்திற்கு அவரது வீடு தெரியாதென்பதால் அவருக்கு வழிகாட்ட நானும் கேசவனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெடுநேரம் நின்றிருந்தும் அவரது கார் காணப்படாததால்,நாங்கள் அவருக்கு ஃபோன்செய்ய,அவரோ,சத்சங்க இடத்திற்கு முன்பே வந்துவிட்டதாகக் கூறினார்.அச்சமயம்,ஒரு ஆட்டோ மெல்ல எங்களருகில் வர,அதன் பின்புறம், 'பாவம் நீ ' என்ற வாசகத்துடன் எங்களை நோக்கிய ஒரு அம்புக் குறியுடன் காணப்பட்டிருப்பது கண்டு வியப்படைந்ததோடு,,டாக்டரின் குறும்பையும் உணர்ந்து அகமகிழ்ந்தோம்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு,கேசவனுடனும்,சங்கருடனும் நானும் இமாலயப் பயணம் சென்றிருந்தேன். பயணத்தின் ஒருபகுதியாக கேதார்நாத் புறப்பட்டோம்..அச்சமயம் நல்ல மழை,தொடர்மழை. கேசவனும் சங்கரும் மட்டும் மலை அடிவாரத்திலிருந்து கேதார்நாத் புறப்படுவதாகத் திட்டம் .நான் செல்லுவதில் ஒரு தடை என்னவென்றால், அதற்கு சில மாதங்கள் முன்தான் எனக்கு ஹெர்னியா ஆபரேஷன் நடந்திருந்தது. ஆயினும், என் மனம், இத்தகைய ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்கக்கூடுமோ இதை விட்டுவிடுவதா என ஒரு போராட்டத்தில் குழம்பித் தவித்தது. கேசவன் மூலம் தக்க பதிலை எனக்குத் தருமாறு டக்டரிடம் மீண்டும் மீண்டும் மன்றாடிப் பிரார்த்தித்தேன். கேசவனிடமும் திரும்பத் திரும்ப 'ஏதாவது தோன்றுகிறதா எனக் கேட்டுக் கொண்டிருந்தேன்.அவரும், "ஒன்றும் தோன்றவில்லையே" எனக்கூறிக்கொண்டிருந்தார்.ஆயினும் அவர், "பொருத்திருங்கள், டாக்டர் உங்களுக்கே விடை அளிப்பார்" என்றார்.அதன்பின் நாங்கள் கௌரிகுண்டத்தீர்த்ததில்( வெண்ணீர் ஊற்று) நீராடினோம்.என் மனமும் விடைகாணாது கொந்தளித்துக் கொண்டிருந்தது." ஆ, அதோ விடை என் மனத் தவிப்பிற்கு!"..ஆம்!, அந்த நீருற்று எதிரே நான் எதேச்சையாகத் திரும்ப,அங்கே ஒரு ஹோட்டலின் பெயர்ப்பலகையில் 'DON'T MISS GOLDEN CHANCE' ( அது என்ன அந்த ஹோட்டலுக்கு இப்படி ஒரு பெயரா! ) எனப் பொறிக்கப்பட்டிருந்தது கண்டேன்,கேசவனிடமும் கூற,அவரும் அதைக் கண்டார்."பார்த்தீர்களா,டாக்டர் உங்களுக்கு விடை தந்துவிட்டார், புறப்படுங்கள்" என்றார்.பின் என்ன, விருப்பம் நிறைவேறியது.மிரட்டிக்கொண்டிருந்த மழையும் அதன் பின்னர் துளியும் எங்களைத் தொடரவேயில்லை.அம்மா கூறுவதுபோல் அது போன்ற வாசகங்கள் டாக்டரால் வேறொன்றின் மீது (superscribe/overwrite) எழுதப்பட்டிருக்கும்தான்.

சில நேரங்களில் ஏதேனும் ஒரு சில பிரச்சினைகளால் மனம் தளர்ந்து விரக்தியடைவதுண்டு.ஆயினும்,டாக்டர் நினைவு வர மனதில் தைர்ய உணர்வு தோன்றும்.இத்தகைய நிலை நம்மில் பலருக்கு நேர்ந்திருக்கக்கூடும்.இத்தகைய ஒரு மனநிலையில் நான் படிக்க நேரிட்ட ஒரு செய்தி.: " The Lord is ready to extend His grace to all His devotees,but in the case of a few,who are extremely dear to Him,He makes them go through extreme trials, tests their tenacity and removes all their sins and takes them to His Abode". yes,this is what is happening in all our cases. If you go through the mesaage on SURRENDER as given to us by The Mother on October 10th 1996,this will affirm this statement!

இதே போன்ற மற்றொரு நேரத்தில் எனக்குக் கிட்டிய, தைர்யமூட்டும் மற்றொரு செய்தி.:"பயப்படாதே!.நான் உன்னை மீட்டுக்கொண்டேன்.நான் உன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்,நீ என்னுடையவன்!".

அம்மா எங்களுக்கு டாக்டர் நிச்சயம் வெளிவருவார்,நம்முடன் மீண்டும் சேர்வார் என்று ஆணித்தரமான நம்பிக்கையை விதைத்துள்ளார்.எனினும்சில நேரங்களில்,டாக்டரின் பிரிவு மனத்தில் ஒரு ஏக்கத்தையும்,தாபத்தையும் ஏற்படுத்தும்.அதுபோன்ற நேரங்களில் ஒருசமயம் நான் படிக்க நேரிட்ட வாசகங்கள்:

"Jesus is coming! Are you prepared?"

மேலும்,

"Jesus is coming soon".
-ஜானி
Back to Top
பிஸ்மில்லா ரஹ்மான் ஹரி ஹல்லேலூயா ஓம் நமச்சிவாயா