ஆனந்த வள்ளல்
ANANDA JOTHI
OURGURU
முதல் பக்கம்
ஆனந்தவள்ளல்
வாய்ஸ்
குரு
அனுபவங்கள்
பாடல்கள்
பாடல்கள்2
ஆல்பம்
வீடியோ
Mail This Page
நம் சத்குருவின் சீடர்களில் ஒருவர் திருமதி மாலதி கோபாலன்.
அவர் தம் பேத்தி ரசிகாவிற்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே விளக்குகிறார்.
என் அனுபவம்
என்னுடைய பேத்தி ரசிகாவிற்கு இரண்டாம் தேதி தடுப்பூசி (triple antigen) போட்டு வந்தோம். அவள் 48 நாட்களே ஆன குழந்தை. அன்றைக்கு ஜுரம் ஜாஸ்தியாகி மறு நாள் காலை அவளை தொட்டிலில் இருந்து எடுக்கும் போது ஜுரத்தின் வேகம் இன்னும் அதிகமாகி இருந்தது. குழந்தை அப்போது சாதாரணமாகத்தான் பால் குடிதது விளையாடிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் சென்ற பின் குழந்தையின் கண்கள் மேலே செருகிக்கொண்டு முனகல் சத்தம் மட்டுமே கேட்டது. என் மகள் தான் முதலில் இதை கவனித்தாள். அவள் பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டாள். பிறகு குழந்தையை எடுத்துச் சென்று நம் குருநாதர் டாக்டர் படத்தின் முன் நின்று ப்ரார்தனை செய்துவிட்டு, சோபாவில் குழந்தையைக் கிடத்திவிட்டு அழுது கொண்டிருந்தாள்.
நானும் இதை கவனித்துவிட்டு மிகுந்த மன வேதனையுடன் டாக்டர் படத்தின் முன் சென்று, “டாக்டர் நீங்கள் கொடுத்த குழந்தை; அவளுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது” என்று ப்ரார்தித்துக் கொண்டிருந்த போது டாக்டர் படத்திலிருந்து ஒரு ஜோதி புறப்பட்டு என்னிடம் வந்தது. நான் தொடர்ந்து இந்த ஜோதி என்னிடம் நின்றுவிடாமல் என் பேத்தி ரசிகாவிடம் சென்று அடைய வேண்டும் என்றும், நான் திரும்பி சென்று பார்க்கும் போது குழந்தை அழுது பால் குடிக்க வேண்டும் என ப்ரார்தித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் நின்றிருந்த ஜோதி என்னை தாண்டி குழந்தையிடம் சென்றது. இதைக் கண்ட நான் தாங்க முடியாத மகிழ்ச்சியில் என் மகள் இந்திராவிடம் சென்று நடந்ததை கூறினேன். அவளும் இதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனாள்.
அப்போது குழந்தையை திரும்பிப் பார்த்த போது குழந்தை, கை கால்களை அசைத்துக் கொண்டு சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள். பால் குடிக்க தொடங்கி விட்டாள். எங்கள் அனைவருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை. இந்த அனுபவம் எங்களுக்கு கிடைத்தது, நாங்கள் செய்த பெரும் பாக்கியம் என எண்ணி பெரு மகிழ்ச்சியடைந்தோம். இது டாக்டர் எங்களுக்கு தந்த மறக்கமுடியாத அனுபவம்.
மாலதி கோபாலன்
பிஸ்மில்லா ரஹ்மான் ஹரி ஹல்லேலூயா ஓம் நமச்சிவாயா